உக்ரைன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர், எங்கள் நாட்டின் மீது ரஷ்யா முழுமையான போரை தொடங்கியிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் நாட்டின் மீது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உத்தரவு பிறப்பித்தார். அதன்படி உக்ரைன் நாட்டின் பல நகர்களில் ரஷ்ய படைகள் ஏவுகணைத் தாக்குதல்களை அதிகப்படுத்தியுள்ளது. மேலும் ரஷ்யா, உக்ரைன் நாட்டின் விமான நிலையங்களையும், துறைமுகங்களையும் ஆக்கிரமிப்பதில் தீவிரமாக உள்ளது.
இதனைத் தொடர்ந்து, உக்ரைன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரான டிமைட்ரோ குலேபா, தெரிவித்திருப்பதாவது, தங்கள் நாட்டின் மீது ரஷ்யா முழுமையான போரை தொடங்கியிருக்கிறது. அமைதியான நிலையில் இருந்த உக்ரைன் நாட்டின் நகர்களில் தாக்குதல் நடக்கிறது.
எனவே, உலக நாடுகள் இந்த பிரச்சனையில் தலையிட்டு, உடனே அதிபர் புடினின் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். பேரழிவை உண்டாக்கும் நடவடிக்கையை ரஷ்யா ஏற்படுத்தியிருக்கிறது. இதில், உக்ரைன் தங்களை தற்காத்து வெல்லும். ரஷ்யா தற்போது தனித்து விடப்பட்டிருக்கிறது. உலக நாடுகள் மற்றும் ஐரோப்பாவின் எதிர்காலம் அபாயமாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.