மொத்தம் 35 வேட்பாளர்கள் களமிறங்கிய இந்த தேர்தலில் உக்ரைன் மக்கள் புதிய மாற்றத்தை விரும்பி ஜெலன்ஸ்கியை ஆதரித்தனர்.தனது அரசியல் கொள்கை இதுதான் என்று சொல்ல முடியாத நிலையில் ஜெலன்ஸ்கி தேர்தல் நேர விவாதங்களை தவிர்த்து விமர்சனத்துக் _ குள்ளாகிய போதும் மக்களின் ஆதரவு அவருக்கு குறையவில்லை. மொத்த வாக்குபதிவில் பெட்ரோ பொரஷென்கோவை விட ஜெலன்ஸ்கி 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று முன்னிலை பெற்றார். இதில் ஜெலன்ஸ்கி சுமார் 74 சதவீத வாக்குகளை பெற்று அமோக வெற்றிப்பெற்றார். வாக்குப்பதிவு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் மக்கள் மத்தியில் பேசிய ஜெலன்ஸ்கி, நான் உங்களை ஒருபோதும் விட்டுவிடமாட்டேன் என்று தெரிவித்தார்.
Categories