உக்ரேனில் தாக்குதல் மேற்கொண்டு வரும் ரஷ்ய படையினர் என்னும் நகரின் ராணுவ தளபதியை சிறைப் வைத்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள்.
உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியில் இருக்கும் செவெரோடோனெட்க் என்னும் நகரத்தில் ரஷ்ய படையினர் தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்நகரை சேர்ந்த மக்கள் வெளியேற அமைக்கப்பட்டிருந்த தரை பாலங்கள் ரஷ்ய படையினரால் தகர்க்கப்பட்டுள்ளது.
மேலும், செவெரோடோனெட்க் நகரை சேர்ந்த அனைத்து மக்களும் சரணடைந்து விட வேண்டுமென்று ரஷ்ய படைகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
இந்நிலையில் செவெரோடோனெட்க் நகரத்தில் இருக்கும் மெட்டல்கினோ என்னும் கிராமத்தை ரசியா கைப்பற்றியது. அப்போது, உக்ரைன் நாட்டின் ஐடார் பட்டாலியன் ராணுவ அமைப்பினுடைய தளபதியை ரஷ்ய படையினர் சிறை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.