பெலாரஸ் நாட்டில், ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது மேற்கொண்ட போரை நிறுத்துவது குறித்து இன்று பேச்சுவார்த்தை நடக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகள், உக்ரைன் போர் முடிவடைய வேண்டும் என்று விரும்புகின்றன. தற்போது, ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு சம்மதித்துள்ளது. பெலாரஸ் நாட்டில் இருக்கும் ஹோமெல் நகரத்திற்கு ரஷ்யாவின் தூதுக்குழு சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யா, வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி மூலமாக உக்ரைன் நாட்டின் மீது தீவிர தாக்குதல் மேற்கொள்கிறது.
இதில், உக்ரைன் நாட்டில் கடும் பொருட்சேதமும், உயிர் பலிகளும் ஏற்பட்டிருக்கிறது. எனினும், உக்ரைன் நிலைகுலைந்து போகவில்லை. பெலாரஸ் நாட்டில் உள்ள ஹோமெல் நகரத்தில் பேச்சுவார்த்தை நடத்த சம்மதிப்பதாக நேற்று இரவில் உக்ரைன் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
அதன்படி, பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பெலாரஸ் நாட்டிற்கு உக்ரைன் சார்பாக ஒரு குழு அனுப்பப்படுவது உறுதியாகியிருந்தது. இந்நிலையில், ரஷ்ய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் குழு பெலாரஸ் நாட்டிற்கு அனுப்பப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.