உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி, தங்கள் நாட்டு மக்கள் தைரியமானவர்கள் என்று பாராட்டியிருக்கிறார்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 40 நாட்களை தாண்டி கடுமையாக போர் தொடுத்து வருகிறது. எனினும் எதிர்பார்த்த அளவிற்கு ரஷ்யா வெற்றி பெறவில்லை. ரஷ்யப் படைகள் உக்ரைன் நாட்டின் ராணுவ கட்டமைப்புகளை மீறி தாக்குதல் மேற்கொண்டு, அப்பாவி பொது மக்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி, தங்கள் நாட்டு மக்கள் குறித்து பாராட்டி பேசியிருக்கிறார். தீமை புரிவதில் ரஷ்யா, பெரிய நாடாக இருந்தால், தைரியத்தில் உக்ரைன் பெரிய நாடாக திகழ்கிறது என்று தெரிவித்திருக்கிறார். மேலும், உக்ரைன் நாட்டின் மக்களுக்கு செய்த குற்றங்களுக்கு ரஷ்ய படைகளும் அவர்களின் தளபதிகளும் தான் பொறுப்பு என்பதை உலக நாடுகள் வலியுறுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்.