உக்ரைன் ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று ராணுவத்தில் இணைந்த கனேடியரான Igor Volzhanin.
கனேடியரான Igor Volzhanin உக்ரைனில் விடுமுறையை கழிக்க சென்றார். பிப்ரவரி 25ம் தேதி அவர் பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல வேண்டிய நிலையில் ரஷ்ய துருப்புகள் உக்ரைன் மீது படையெடுப்பை முன்னெடுத்ததனால் பயணம் ரத்தாகியுள்ளது. உலகெங்கிலும் உள்ள மக்களை ரஷ்யாவை எதிர்த்துப் போராட உதவுமாறு அடுத்த சில நாட்களில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து 52 நாடுகளைச் சேர்ந்த 20,000 பேரில் தன்னார்வத்துடன் போராட முன்வந்தவர்களில் இரண்டாவது நபராக இராணுவத்தில் அனுபவம் ஏதுமற்ற Igor Volzhanin உக்ரைன் ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று வெளிநாட்டு படைகளுக்கான பிரிவில் இணைந்துள்ளார். ஆபத்தான போருக்கு செல்வதாகவும், எப்போது வேண்டுமானாலும் மரணம் ஏற்படலாம் எனவும் மரணம் உறுதி என்பதை புரிந்துகொண்டு களத்தில் இறங்க வேண்டும் என்று அப்போதைய சூழலில் அந்த முடிவே சரியானது என தாம் நினைத்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ரஷ்யாவுக்கு எதிரான போரில் பதிவு செய்த சுமார் 1500 கனேடிய வீரர்களில் பெரும்பாலானவர்களை போர்க்களத்திற்கு அனுப்பவில்லை என்றும் வெளிநாட்டு வீரர்களுக்கான துருப்பில் சேர்பவர்கள் இராணுவச் சட்டம் நீக்கப்படும் வரை உக்ரைனில் தங்கியிருப்போம் என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.
ஆனால் சிறப்பு காரணங்களுக்காக நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் Igor Volzhanin உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா, பால்கன் போர்களில் பணியாற்றிய வீரர்கள் மற்றும் தென் அமெரிக்காவில் போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எதிராக போராடியவர்கள் என முன்னாள் வீரர்களுக்கு மரியாதை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.