உக்ரைனில் இன்னும் 40 முதல் 50 இந்தியர்கள் இருப்பதாகவும் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க படும் மத்திய வெளியுறவுத்துறை துணைஅமைச்சர் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத் துறை துணை அமைச்சர் மீனாட்சி லேகியிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய வெளியுறவு துறை அமைச்சர் “உக்ரைனில் இருந்து இதுவரை 22,500 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் உக்ரைனில் 40 முதல் 50 இந்தியர்கள் இருப்பதாகவும், அவர்களில் சிலர் நாடு திரும்ப ஆசைப்படுகின்றனர்.
மேலும் அவர்களை மீட்க இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை ஏற்கப்படும். இதனைத் தொடர்ந்து கொரோனா காலத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்த 2,94 லட்சம் பேர் வந்தே பாரத திட்டதின் கீழ் விமானம் மூலம் மீட்கப்பட்டதாக” தெரிவித்துள்ளார்.