உக்ரைன் வீரர்கள் நடத்திய தாக்குதலில் ரஷ்யாவின் இரண்டு போர் வாகனங்கள் அளிக்கப்பட்ட காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா முழு வீச்சு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் மரியூபோல் நகரில் உக்ரைன் படையினர் ரஷ்ய போர் விமானம் ஒன்றே குறி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ரஷ்யாவின் அந்தப் போர் விமானம் வெடித்து சிதறியடோது அதில் இருந்து சிதறிய குண்டுகள் மற்றொரு பக்கத்தில் இருந்த ரஷ்யாவின் போர் வாகனத்தின் மீது விழுந்ததில் அந்த வாகனமும் வெடித்து சிதறிய காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் உக்ரைனின் தாக்குதலில் ரஷ்ய படையினரின் இரண்டு போர் வாகனங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அந்த வீடியோவில் ரஷ்யா படையினரால் மரியூபோல் நகரம் 90% வரை சேதமடைந்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.