Categories
உலக செய்திகள்

சப்பா….!! இன்னும் எத்தனை நாள் தான் தாக்கு புடிக்க முடியும்….? திணறி வரும் ரஷ்யா….!!!

ரஷ்யாவின் படையடுப்பை 20 நாட்களுக்கு மேலாகியும் உக்ரைன் வீரர்கள் எதிர்த்து போராடி வருகின்றனர்.

உக்ரைன் மீது ரஷ்யா முழு வீச்சு தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைனை ஒரே வாரத்தில் கைபற்றி விடலாம் என்று புதின் நினைத்து இருந்தார். இந்த நிலையில் 20 நாட்களுக்கு மேலாகியும் உக்ரைன் வீரர்கள் ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்த்துப் போராடி வருகின்றனர். இதற்கிடையில் ரஷ்யா உக்ரைனின் வான்வெளியை தனது கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து ரஷ்யாவிடம் 1,396 போர் விமானங்கள், 948 ஹெலிகாப்டர்கள் உள்ளன. ஆனால் உக்ரைனிடம் வெறும் 132 விமானங்களும், 55 ஹெலிகாப்டர்கள் தான் இருக்கின்றது. உக்ரைனை விட ரஷ்யா பாதுகாப்பு பட்ஜெட்டில் பத்து மடங்கு அதிகம் இருக்கிறது. இருபினும் ரஷ்யாவால் தன் கட்டுக்குள் உக்ரைன் வான் பரப்பை கொண்டு வர முடியவில்லை. இந்த நிலையில் இன்னும் எத்தனை நாட்கள் தான் உக்ரைனால் தனது நிலத்தையும், வானத்தையும் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று கேள்வி எழுந்துள்ளது.

Categories

Tech |