உலக ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் .
ஏ.டி.பி இறுதிச்சுற்று என அழைக்கப்படும் உலக ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் உள்ள துரின் நகரில் நடைபெற்று வருகிறது .இதில் நேற்று முன்தினம் நடந்த அரையிறுதி போட்டியில் நம்பர் 1 வீரரான செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச், தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள ஜெர்மனி வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவை எதிர்த்து மோதினார்.
இதில் 7-6 (7-4), 4-6, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற அலெக்சாண்டர் ஸ்வெரேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார். இப்போட்டி சுமார் 2 மணி 29 நிமிடங்கள் வரை நடந்தது. இப்போட்டியில் கவுரவமிக்க இப்படத்தை 6-வது முறையாக கைப்பற்றி ரோஜர் பெடரரின் சாதனையை சமன் செய்ய காத்திருந்த நோவக் ஜோகோவிச்சின் கனவு தகர்ந்தது.