Categories
டென்னிஸ் விளையாட்டு

உலக ஆடவர்  டென்னிஸ்: நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் அசத்தல் வெற்றி ….!!!

உலக ஆடவர்  டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்,கேஸ்பர் ரூட்டை வீழ்த்தி வெற்றி பெற்றார் .

ஒவ்வொரு ஆண்டின் இறுதியில் ஏ.டி.பி. இறுதிச்சுற்று என அழைக்கப்படும் உலக ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஏ.டி.பி. இறுதிச்சுற்று உலக ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியானது இத்தாலியில் துரின்  நகரில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ‘டாப்-8’ இடங்களை பிடிக்கும் வீரர்கள் மட்டுமே கலந்து கொள்வர்.

இதில் கலந்துகொள்ளும் வீரர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொருவரும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீரர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும் இதையடுத்து ‘ரவுண்ட்-ராபின்’ முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரை இறுதிக்கு முன்னேறுவர். இந்நிலையில் ‘கிரீன்’ பிரிவில் நடந்த ஆட்டத்தில் செர்பியாவை  சேர்ந்த நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்,  நார்வே வீரரான கேஸ்பர் ரூட்டை எதிர்த்து மோதினார் . இதில் 7-6 (7-4), 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற ஜோகோவிச் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் .

Categories

Tech |