மரணத்தண்டனையை ஒழிப்பதற்கான பணியை பிரான்ஸ் தொடங்கும் என்று இமானுவேல் மேக்ரோன் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் வருகின்ற 2022 ஆம் ஆண்டின் முதற்பகுதியில் இருந்து ஐரோப்பிய ஒன்றிய அமைப்புக்கு தலைமை பொறுப்பு வகிக்க உள்ளது. மேலும் பிரான்ஸ் தலைமை பகுதியை ஏற்றவுடன் சர்வதேச அளவில் மரணத்தண்டனையை ஒழிப்பதற்கான பணியைத் துவங்கும். குறிப்பாக ஒவ்வொரு நாடுகளும் ஆண்டொன்றுக்கு விதிக்கப்பட்ட மற்றும் நிறைவேற்றப்பட்ட மரணத்தண்டனைகளின் எண்ணிக்கையை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் கொண்டு வருவதற்கு மற்ற நாடுகளுடன் இணைந்து செயல்படும் என்று பிரான்ஸ் அதிபர் இமானுமேல் மேக்ரோன் தகவல் தெரிவித்துள்ளார்.
அதிலும் உலகில் மரணத் தண்டனைக்கு தடை விதித்த 35 வது நாடு பிரான்ஸ் ஆகும். இருப்பினும் பிரான்சில் மரணத்தண்டனை ஒழிப்பது தொடர்பாக கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது. அதில் “மக்களின் கருத்து இவ்விவகாரத்தில் மிகவும் வேறுபட்டு காணப்படுகிறது” என்று கூறியுள்ளனர். மேலும் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள வலதுசாரி பத்திரிக்கையாளரான Eric Zemmour மரணத்தண்டனைக்கு ஆதரவு தெரிவிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.