உலக நாடுகள் முழுவதும் கொரோனா தொற்றால் , 12 .82 கோடிக்கு மேல் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து காணப்படுகிறது .
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சீனாவில் பரவிய கொரோனா தொற்றானது , உலக நாடுகள் முழுவதும் பரவி பெருந்தொற்றாக மாறியது. இந்த கொரோன வைரஸ் பரவத் தொடங்கி ,ஒரு வருட காலமாகியும் ,இதனுடைய தாக்கம் குறையவில்லை. கடந்த சில மாதங்களாக குறைய தொடங்கிய கொரோனா வைரஸ்,தற்போது அதிகரித்து காணப்படுகிறது . உலக நாடுகள் முழுவதுமாக பாதிப்பு எண்ணிக்கை சுமார் 12. 82 கோடியை கடந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த தொற்றிலிருந்து 10.34 கோடிக்கும் மேலாக மக்கள் குணமடைந்துள்ளனர். இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ,உலகளவில் சுமார் 28 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தற்போதைய நிலையில் வைரஸ் தொற்றால் ,பாதிக்கப்பட்டவர்களில் 2.19 கோடிக்கும் மேலான மக்கள் சிகிச்சையில் உள்ளனர் என்றும், இதில் 94 , 600 மேற்பட்டவர்களின் நிலமை மோசமாக உள்ளது.கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் 5 நாடுகளான அமெரிக்கா, இந்தியா,ரஷ்யா , பிரேசில், பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன.