Categories
பேட்மிண்டன் விளையாட்டு

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் : நட்சத்திர வீராங்கனை கரோலினா மரின் விலகல் …!!!

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் விலகியுள்ளார் .

26-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்பெயினில் வெல்வா நகரில் நடைபெறுகிறது. இப்போட்டி நாளை முதல் தொடங்கி 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் ,தென்கொரியாவை சேர்ந்த அன்செயோங் , தாய்லாந்தை சேர்ந்த ராட்சனோக் இன்டானோன்  உட்பட முன்னணி வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர் .இந்நிலையில் 3 முறை உலகச் சாம்பியன் பட்டம் வென்றவரும், முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனுமான ஸ்பெயின் நாட்டை சேர்ந்த வீராங்கனை கரோலினா மரின் இத்தொடரில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டில் அவர் விளையாடிய 5 போட்டிகளில் 4 மகுடம் சூடி வெற்றி பெற்றிருந்தார்.ஆனால் பயிற்சியின் போது அவருக்கு இடது கால் முட்டியில் காயம் ஏற்பட்டது .இந்த காயத்தில் இருந்து மீள்வதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்தார் .இதனிடையே சொந்த மண்ணில் நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் மீண்டும் களம் திரும்பத் திட்டமிட்டு இருப்பதாக ஏற்கனவே அவர் தெரிவித்துள்ளார் . ஆனால் அவர் முழு உடல் தகுதி பெறாததால் இந்த போட்டியிலிருந்து விலகியுள்ளார் .இதுகுறித்து அவர் கூறும்போது ,”காயத்திலிருந்து 100 சதவீதம் குணமடையாத வரை களம்  திரும்பமாட்டேன் .அனேகமாக பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் மீண்டும் சர்வதேச தொடரில் விளையாட வாய்ப்பு உள்ளது “இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |