உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்ற ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி ஸ்பெயினில் உள்ள வெல்வா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீரர் கிதம்பி ஸ்ரீகாந்த் டச்சு நாட்டின் மார்க் கால்ஜூவை எதிர்த்து மோதினார். இதில் 21-8, 21-7 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார் .
இப்போட்டி 20 நிமிடங்கள் நடைபெற்றது. இதன் மூலம் இந்தியாவுக்கு பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது .அதேசமயம் உலக சாம்பியன்ஷிப் தொடரில் ஸ்ரீகாந்துக்கு இது முதல் பதக்கம் ஆகும் .அதேபோல் உலக சாம்பியன்ஷிப் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் 3-வது பதக்கம் ஆகும்.