உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் கிதம்பி ஸ்ரீகாந்த் வெள்ளி வென்று சாதனை படைத்துள்ளார் .
26-வது உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி ஸ்பெயினில் வெல்வா நகரில் நடந்து வருகிறது . இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் கிதம்பி ஸ்ரீகாந்த் சிங்கப்பூரை சேர்ந்த லோ கியான் யூ உடன் மோதினார் .
இதில் 21.15, 22-20 என்ற நேர் செட் கணக்கில் கியான் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இப்போட்டி 43 நிமிடங்கள் நீடித்தது. இதில் ஸ்ரீகாந்த் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். அதேசமயம் உலக சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.