உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் ஜப்பானின் அகானே சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
26-வது உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி ஸ்பெயின் நாட்டில் வெல்வா நகரில் நடைபெற்று வருகிறது .இதில் நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஜப்பானிய வீராங்கனை அகானே யமகச்சி முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான சீன தைபே சேர்ந்த தாய் ஜூ யிங் கை எதிர்த்து மோதினார்.
இதில் முதல் செட்டை 14-21 என்ற கணக்கில் கைப்பற்றிய அகானே, 2-வது செட்டையும் 11-21 என்ற கணக்கில் கைப்பற்றினார். இறுதியாக 14-21 , 11-21 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற அகானே யமகச்சி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.