Categories
விளையாட்டு

உலக இளையோர்  குத்துச்சண்டை போட்டி … இந்தியர்கள் 8 பேர் இறுதிச்சுற்றிற்கு முன்னேற்றம்…!!!

உலக இளையோர்  குத்துச்சண்டை போட்டியில்  , இந்தியாவிலிருந்து மொத்தமாக 8 பேர் இறுதிச்சுற்றிற்கு முன்னேறி உள்ளனர் .

போலந்து நாட்டில் நடைபெற்று வரும் உலக இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பல நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளன . இந்த சாம்பியன்ஷிப் போட்டிக்கான இறுதி சுற்றிற்கு இந்திய வீராங்கனைகள் ஜித்திகா 48 கிலோ பேபிரோஜிசனா சானு (51 கிலோ), வின்கா (60 கிலோ), அருந்ததி சவுத்ரி (69 கிலோ), பூனம் (57கிலோ), தோக்சோம் சனமச்சா சானு (75 கிலோ), அல்பியா பதான் (81 கிலோ) ஆகிய வீராங்கனைகள் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர் .

இதைத்தொடர்ந்து ஆண்களுக்கான 56 கிலோ பிரிவில் இந்திய வீரரான சச்சின் ,ஐரோப்பிய நாட்டின் முன்னாள் ஜூனியர் சாம்பியன்ஷிப்பை வென்ற மைக்கேல் பால்டாசியுடன் மோதி, 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதனால்இந்தியாவிலிருந்து மொத்தமாக 8 பேர்  இறுதிச்சுற்றிற்கு  முன்னேறி உள்ளதால் , இந்தியாவிற்கு தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதில் பங்குபெற்ற மற்ற வீரர்களான பிஷ்வாமித்ரா சோங்தோம்(49 கிலோ) , அங்கித் நார்வால் (64 கிலோ), விஷால் குப்தா (91 கிலோ) ஆகியோர் தங்களுடைய அரை இறுதிச் சுற்றில் ,தோல்வியை சந்தித்து வெண்கலப் பதக்கத்துடன் நாடு திரும்பினர்.

Categories

Tech |