Categories
பேட்மிண்டன் விளையாட்டு

உலக இறுதி சுற்று பேட்மிண்டன் :பி.வி.சிந்து ,ஸ்ரீகாந்த் அசத்தல் வெற்றி …..!!!

உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பி.வி.சிந்து ,ஸ்ரீகாந்த் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளார் .

உலக தரவரிசையில் ‘டாப் 8’ வீரர்-வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டி  இந்தோனேசியாவின் பாலி நகரில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டுள்ள வீரர் வீராங்கனைகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன. இதில் லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2  இடங்களை பிடிக்கும் வீரர் வீராங்கனைகள் அரையிறுதிக்கு முன்னேறுவார்கள்.

இதில் நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் லீக் ஆட்டத்தில் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, டென்மார்க் வீராங்கனை லின் கிறிஸ்டோபர்சென்னுடன் எதிர்த்து மோதினார் .இதில் 21-14, 21-16  என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற பி.வி.சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.இதையடுத்து ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் பிரான்சை சேர்ந்த  தோமா ஜூனியர் போபோவை எதிர்கொண்டார். இதில் 21-14, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற ஸ்ரீகாந்த் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Categories

Tech |