உலக இறுதிச்சுற்று பேட்மிட்டண் போட்டியில் இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார்.
உலக இறுதிச்சுற்று பேட்மிட்டண் போட்டி இந்தோனேசியாவில் உள்ள பாலி நகரில் நடைபெற்று வருகிறது இதில் ‘குரூப் ஏ’ பிரிவில் இடம்பெற்றிருந்த இந்திய வீராங்கனை பி.வி.சிந்து லீக் சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி இருந்தார் .இதில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் தாய்லாந்தை சேர்ந்த போன்பவி சோச்சுவாங்கிடம் , சிந்து தோல்வியடைந்தார். இதனால் ‘குரூப் ஏ’ பிரிவில் அவர் 2-வது இடத்தை பிடித்தார் .
இதனிடையே இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம் பெற்ற ஜப்பானை சேர்ந்த அகானே யமகுச்சி – பிவி சிந்து மோதினர் . இதில் முதல் செட்டை 21-15 என்ற கணக்கில் பி.வி.சிந்து கைப்பற்ற , 2-வது செட்டை 15-21 என்ற கணக்கில் அகானே கைப்பற்றினார். இதையடுத்து 3-வது செட்டை 21-19 என்ற நேர் செட் கணக்கில் கைப்பற்றிய பி.வி சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார்.