Categories
விளையாட்டு

உலக கோப்பை செஸ் போட்டிக்கு …. தமிழக வீரர் இனியன் தகுதி பெற்றார் …!!!

ரஷ்யாவில் நடைபெறும் உலக கோப்பை செஸ் போட்டிக்கு , தமிழக வீரரான இனியன் தகுதி பெற்றுள்ளார்.

ரஷ்யாவில் சோச்சி  நகரில் நடைபெற உள்ள ,உலக கோப்பை செஸ் போட்டி,அடுத்த மாதம்  ஜூலை 10-ஆம் தேதி முதல் தொடங்கி  ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது . இந்த போட்டியில் இந்தியா சார்பில் பங்குபெறும்  செஸ் வீரரை தேர்ந்தெடுக்க, அகில இந்திய செஸ் சம்மேளனம் சார்பில் ஆன்லைன் மூலமாக செஸ் போட்டிகள்  நடத்தப்பட்டது .

17 வீரர்கள் கலந்து கொண்ட போட்டியில் , ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் இனியன் 12 போட்டியில் வெற்றி பெற்று, ஒரு டிரா மற்றும் 3 போட்டியில் தோல்வியடைந்து, 12½ புள்ளிகள் எடுத்து  வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதுடன், உலக கோப்பை  செஸ் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

Categories

Tech |