உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்றில், இந்திய அணி தோல்வியை சந்தித்தது.
2022 ம் ஆண்டு உலகக் கோப்பை மற்றும் 2023 ம் ஆண்டு ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கான ஆசிய மண்டல தகுதி சுற்று போட்டியில், இந்திய கால்பந்து அணி விளையாடி வருகின்றது. இதில் ‘ இ ‘ பிரிவில் இருக்கும் இந்திய அணி , மற்ற அணிகளான கத்தார், ஓமன், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுடன் மோதி வருகின்றது . இதற்கு முன் உலகக் கோப்பையில் பங்கு பெறுவதற்கான வாய்ப்பை இந்திய அணி தவறவிட்டது.
இதனால் 5வது லீக் போட்டியில் ஆசிய சாம்பியனான கத்தார் அணியுடன் ,இந்திய அணி மோதியது இதில் போட்டியின் முதல் பாதியில் கத்தார் வீரரான அப்துலாசிஸ் ஹதெம், 33 வது நிமிடத்தில் கோல் அடித்தார். போட்டியின் இறுதி வரை இந்திய அணி எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணானது. இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் கத்தார் அணி வெற்றியை கைப்பற்றியது.