Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலக கோப்பை டி20 போட்டி: இந்தியாவில் 9 இடங்களை…! பரிந்துரை செய்த பிசிசிஐ…!!!

இந்த ஆண்டில் இந்தியாவின் நடைபெறும் ,உலக கோப்பை டி20 போட்டிக்கு ,9 இடங்களை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.

இந்தியாவின் இந்த ஆண்டில் நடைபெற உள்ள உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிக்காக , 9 மைதானங்களில் போட்டிகள் நடத்த ஐசிசிக்கு , பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது. அதன்படி சென்னை, அகமதாபாத் ,டெல்லி ,பெங்களூர் ,ஹைதராபாத், கொல்கத்தா, தர்மசாலா, மும்பை, லக்னோ ஆகிய 9 இடங்களில் பரிந்துரை செய்துள்ளது . ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா பரவல்  அதிகரித்து இருப்பதால் ,போட்டி நடத்துவதற்கான இடங்களை ,ஐசிசி இறுதியாக முடிவு செய்யும்.

தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று  அதிகரித்திருப்பதால், ஐசிசி நிபுணர் குழு , இந்தியாவிற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளை, பிசிசிஐ நிர்வாகம் எவ்வாறு நடத்துகிறது என்று, ஐசிசி கவனித்து வருகிறது. ஒருவேளை எதிர்பாராத விதமாக ,இந்தியாவில் போட்டி நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால் ,அதற்கு மாற்றாக இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐசிசி பரிசீலனை செய்வதாக தெரிகின்றது.

Categories

Tech |