Categories
கால் பந்து விளையாட்டு

உலக கோப்பை  தகுதிச்சுற்று : தோகாவில் பயிற்சியை தொடங்கிய…. இந்திய கால்பந்து அணி…!!!

கத்தார் தலைநகர் தோகாவில் இந்திய கால்பந்து அணி, உலக கோப்பை  தகுதிச்சுற்று போட்டிக்காக பயிற்சியை தொடங்கி உள்ளது .

கத்தார் தலைநகர் தோகாவில்  2023 ம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று போட்டி நடைபெற உள்ளது. இதில்  ‘இ’ பிரிவில் உள்ள, இந்திய அணி அடுத்த லீக் போட்டிகளில் வரும் ஜூன் மாதம் 3ம்  தேதி கத்தாரருடனும் ,7 ம் தேதி வங்காள தேசம் மற்றும் 15 ம் தேதி ஆப்கானிஸ்தான்  ஆகிய அணிகளுடன் மோதுகிறது .3 புள்ளிகளுடன் 4 வது இடத்தில் இந்திய அணி உள்ளது. இந்திய அணி உலகக் கோப்பைக்கான போட்டியை  தவற விட்டாலும், ஆசிய கோப்பை போட்டிக்கான வாய்ப்பில்  நீடிக்கிறது. எனவே இந்தப் போட்டிக்காக இந்திய அணி பயிற்சி முகாமை ,இந்த மாதம் முதல் வாரத்தில் கொல்கத்தாவில் நடைபெற இருந்தது. ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா  பரவல் காரணமாக பயிற்சி முகாம் ரத்து செய்யப்பட்டது.

இந்தத் தகுதி போட்டிக்கு தயாராவதற்கு, இந்திய அணி முன்னதாகவே தோகாவிற்கு  சென்று பயிற்சியில் ஈடுபட முடிவு செய்திருந்தது. இதற்காக கடந்த புதன்கிழமை,டெல்லியிலிருந்து தோகாவிற்கு சென்றுள்ளது. இதில்  28 வீரர்கள் உட்பட உதவியாளர்கள் அனைவரும், தோகாவுக்கு  சென்று ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு, குர்ஆனோ பரிசோதனையும் நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையில் யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை, என்று தெரிந்தது. இதனால் இந்திய அணி நேற்று முன்தினம் தங்களது பயிற்சியை தொடங்கியுள்ளனர். இது குறித்த புகைப்படத்தை அகில இந்திய கால்பந்து சம்மேளனம்,அணியின் தலைமை பயிற்சியாளரான இகோர் ஸ்டிமாக் உடன், வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ள புகைப்படத்தை , தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.

Categories

Tech |