Categories
விளையாட்டு

உலக கோப்பை வில்வித்தை போட்டி …. தங்கம் வென்று அபிஷேக் வர்மா சாதனை …!!!

உலக கோப்பை வில்வித்தை போட்டியில் ‘காம்பவுண்ட்’  பிரிவில்  இந்திய வீரரான அபிஷேக் வர்மா வெற்றி பெற்று  தங்கப்பதக்கத்தை வென்றார்  .

பிரான்ஸ் நாட்டில் தலைநகர் பாரிசில் உலக கோப்பை வில்வித்தை போட்டியில் ‘ஸ்டேஜ் 3’ போட்டி நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான தனிநபர் ‘காம்பவுண்டு’ பிரிவில் அரையிறுதி சுற்றில்  இந்திய வீரர் அபிஷேக் வர்மா , ரஷ்ய வீரர்  ஆன்டன் புலேவ் மோதினார். இதில் அபாரமாக விளையாடிய அபிஷேக் வர்மா 146 138 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதையடுத்து இறுதிப் போட்டியில் அமெரிக்க வீரர் கிரிஸ் ஸ்ஷாப் , அபிஷேக் வர்மா மோதினர்.

இதில் விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் 148 148 என சமனில் முடிந்தது. அதன்பிறகு ‘டை பிரேக்கர் ‘முறையில் வெற்றியாளரை தீர்மானிக்கப்பட்டதில்  இந்திய வீரர் அபிஷேக் வர்மா 109 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். இதன் மூலம் உலக கோப்பை  தனிநபர் பிரிவில் அபிஷேக் வர்மா 2 வது முறையை  தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |