Categories
விளையாட்டு

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : அரையிறுதிக்கு முன்னேறினார் ஆகாஷ் குமார் …..!!!

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் ஆகாஷ் குமார் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் .

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி செர்பியாவில் தலைநகர் பெல்கிரேடில் நடைபெற்று வருகிறது .இதில் 54 கிலோ எடை பிரிவுக்கான காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் ஆகாஷ் குமார் வெனிசுலாவை சேர்ந்த யோல் பினோல் ரிவாஸ்சை எதிர்த்து மோதினார் .இதில்  5-0 என்ற கணக்கில்  யோல் பினோல் ரிவாஸ்சை வீழ்த்தி வெற்றி பெற்ற ஆகாஷ் குமார் அரையிறுதியில் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

மேலும் அரையிறுதிக்கு முன்னேறி உள்ள இந்திய வீரர் ஆகாஷ் குமார் குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். இதன்மூலம் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வெல்லும் 7-வது இந்திய  வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார் .

Categories

Tech |