Categories
விளையாட்டு

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : இந்திய வீரர்கள் அசத்தல் வெற்றி …..!!!

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் ஆகாஷ் குமார்  காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி செர்பியாவில் தலைநகர் பெல்கிரேடில் நடைபெற்று வருகிறது. இதில் 54 கிலோ எடை பிரிவுக்கான போட்டியில் 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ஆகாஷ் குமார் , ஜெர்மனி வீரர்  ஓமர் சாலா இப்ராகிமை எதிர்த்து மோத இருந்தார் .ஆனால் உடல் நலக்குறைவு காரணமாக ஜெர்மனி வீரர் இப்ராஹிம் கடைசி நேரத்தில் விலகியதால் ஆகாஷ் குமார் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் .

இதையடுத்து  67 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் ஆகாஷ் சங்வான், ஜெர்மனியை சேர்ந்த டேனியல் கோட்டெரை எதிர்கொண்டார் .இதில் 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற ஆகாஷ் சங்வான் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதையடுத்து மற்றொரு போட்டியில் இந்தியாவின் சஞ்ஜீத் (92 கிலோ),ரஷ்யாவை சேர்ந்த ஆந்த்ரே ஸ்டோட்ஸ்கியை  தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Categories

Tech |