உலக மகளிர் டென்னிஸ் போட்டியின் 2-வது நாள் நடந்த ஆட்டத்தில் பாலா படோசா மற்றும் மரியா சக்காரி ஆகியோர் வெற்றி பெற்றனர்.
‘டாப்-8 ‘வீராங்கனைகள் மட்டுமே பங்குபெறும் டபிள்யூ.டி.ஏ. இறுதிச்சுற்று என அழைக்கப்படும் உலக மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி மெக்சிகோவில் குவாடலஜரா நகரில் நடைபெற்று வருகிறது .இதில் கலந்து கொண்டுள்ள 8 வீராங்கனைகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன .இதில் 2-வது நாள் நடைபெற்ற ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள ஸ்பெயின் வீராங்கனை பாலா படோசா,2-வது இடத்தில் இருக்கும் பெலாரசைச் சேர்ந்த சபலென்காவை எதிர்த்து மோதினார் .
இதில் படோசா 6-4, 6-0 என்ற செட் கணக்கில் சபலென்காவை வீழ்த்தி வெற்றி பெற்றார் .இப்போட்டி சுமார் ஒரு மணி 16 நிமிடம் வரை நடந்தது .இதையடுத்து நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் 6-வது இடத்தில் இருக்கும் கிரீஸ் நாட்டை சேர்ந்த மரியா சக்காரி முன்னாள் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான போலந்தைச் சேர்ந்த இகா ஸ்வியாடெக்கை எதிர்கொண்டார் .இதில் மரியா சக்காரி 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.