Categories
டென்னிஸ் விளையாட்டு

உலக மகளிர் டென்னிஸ் : நம்பர் ஒன் வீராங்கனை திடீர் விலகல் ….!!!

உலக மகளிர் டென்னிஸ் தொடரில் இருந்து நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லே பார்ட்டி விலகியுள்ளார்.

‘டாப்-8′ வீராங்கனைகள் மட்டும் பங்கு பெரும் உலக மகளிர் டென்னிஸ் இறுதிச்சுற்று போட்டி வருகின்ற  நவம்பர் மாதம் 10-ம் தேதி முதல் தொடங்கி 17ஆம் தேதி வரை மெக்சிகோவில் நடைபெறுகிறது .இதனிடையே உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஷ்லே பார்ட்டி காயம் காரணமாக போட்டியிலிருந்து நேற்று விலகினார் .

இவர் கடைசியாக கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் . இதுகுறித்து ஆஷ்லே பார்ட்டி வெளியிட்ட அறிக்கையில்,’ உலக மகளிர் டென்னிஸ் போட்டி உட்பட இந்த ஆண்டில் நடைபெறும் எந்த ஒரு போட்டியிலும் நான் பங்கேற்க மாட்டேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |