கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து உலக மக்கள் நலம் பெற வேண்டி நாதஸ்வரம் இசை கலைஞர்கள் நாதஸ்வரம் வாசித்து பிரார்த்தனை செய்தனர்.
உலகையே அச்சமடைய செய்திருக்கும் கொரோனா தற்பொழுது இந்தியாவில் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து உலக மக்கள் நலம் பெற வேண்டியும் , கொரோனா பாதிப்பிலிருந்து மிக விரைவாக மக்கள் குணம் அடைய வேண்டியும் சகஜ நிலைக்கு திரும்பும் வகையில், நாதஸ்வர கலைஞர்கள் இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் முன்பாக பத்துக்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் நாதஸ்வர நிகழ்ச்சியை நடத்தினார்கள்.
இவர்கள் சங்கராபரணம், அருணாச்சலேஸ்வரர் ராகத்தில் இசைத்து இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து உலக மக்கள் நலம் பெற வேண்டி இசை நிகழ்ச்சி இசைக்கிறார்கள். இவர்களுடைய முக்கிய குறிக்கோள் என்னவென்றால் மழை வேண்டி தாங்கள் இசை நிகழ்ச்சி நடத்துவதாகவும் மேலும் விவசாயம் செழிக்க இசைநிகழ்ச்சி நடத்துவதாகவும் அந்த வகையில் இப்பொழுது உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையிலும் வைரஸ் பாதிப்பு மிக விரைவில் குணமடைந்து உலக மக்கள் நன்மை பெற வேண்டியும் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் முன்பாக இன்று காலை இசைக் கலைஞர்கள் இசை நிகழ்ச்சியை நடத்தினார்கள்.