Categories
விளையாட்டு

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் : வரலாற்று சாதனை படைத்தார் அன்ஷூ மாலிக் …! வெள்ளி வென்று அசத்தல் ….!!!

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனை அன்ஷூ மாலிக் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார் .

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியானது  நார்வே நாட்டில் நடைபெற்றது. இதில் மகளிருக்கான 57 கிலோ எடை பிரிவுக்கான இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை அன்ஷூ மாலிக், முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனான அமெரிக்காவை சேர்ந்த ஹெலின் மரோலிசை  எதிர்கொண்டார் .இதில் அன்ஷூ மாலிக் தோல்வியடைந்தால் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

இதன் மூலமாக உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிச்சுற்று  வரை சென்று வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளார்.அதேபோல் மகளிர் 59 கிலோ எடை பிரிவில் வெண்கலப் பதக்கதுக்கான  போட்டியில் இந்திய வீராங்கனை சரிதா மோர் ,ஸ்வீடன் வீராங்கனை சாரா லிண்ட்பெர்க்கை எதிர்கொண்டார் .இதில் 8-2 என்ற கணக்கில் வெற்றி பெற்ற  சரிதா மோர் மோர் வெண்கல பதக்கம் வென்றார்.

Categories

Tech |