Categories
உலக செய்திகள்

உங்களிடம் கற்றுக்கொள்வது பெருமை…. உலக பணக்காரரின் பிறந்தநாளுக்கு மகளின் வாழ்த்து….!!

உலகின் மிகப்பெரிய பணக்காரரான பில்கேட்ஸ் பிறந்தநாளன்று அவரது மகள் உணர்வுப்பூர்வமான வாழ்த்து தெரிவித்துள்ளார். 

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ், நேற்று தன்னுடைய 66 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். மேலும், பில்கேட்ஸின் பிறந்தநாளை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதிலும், பில்கேட்ஸின் மகளான ஜெனிஃபர் பில்கேட்ஸ் உணர்வுப்பூர்வ வாழ்த்து செய்தியை அவரது தந்தைக்கு தெரிவித்தார்.

இது குறித்து ஜெனிஃபர் பில்கேட்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்ததாவது, “பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா. எல்லையில்லா ஆர்வம், நிலையான ஆய்வு, சக மனிதர்களுக்கு உதவும் மனப்பான்மை உள்ளிட்ட குணங்களை உங்களிடம் இருந்து தான் கற்றுக்கொண்டேன். இதற்காக நான் மிகவும் பெருமை அடைகிறேன்.

மேலும் வரும் ஆண்டுகளில் நீங்கள் என்ன கற்றுத்தர போகிறீர்கள் என்பதை பற்றி அறிய நான் உற்சாகமாக இருக்கிறேன். அதுமட்டுமின்றி, சமீபத்தில் எங்களது தொழிற்சங்கம் மற்றும் கனவு தினத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றி. இந்த நினைவுகள் எனது வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்” என்றும் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |