உலகப் பிரசித்தி பெற்ற மைசூர் தசரா விழா இன்று காலை தொடங்கியது.
கொரோனா பணியில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர் மஞ்சுநாத் விழாவை தொடங்கி வைத்தார். கொரோனா தொற்று காரணமாக மைசூர் தசரா விழாவில் 200 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 7.30 மணியிலிருந்து 8.15 மணிக்கு சுபமுகூர்த்தத்தில் சாமுண்டீஸ்வரி அம்மனை வணங்கி சிறப்பு பூஜைகளுடன் தசரா விழா தொடங்கப்பட்டது.
கொரோனா பணியில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர் மஞ்சுநாத் விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் முதலமைச்சர் திரு எடியூரப்பா, அமைச்சர்கள் திரு எஸ்.டி. சோமசேகர், திரு பி.சி. பட்டேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடக்க விழாவில் பங்கேற்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தசரா விழாவையொட்டி மைசூர் அரண்மனை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.