கொரோனா நோய்க்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசி வினியோகத்தில் உலக நாடுகளுக்கு இடையே கடும் ஏற்றத்தாழ்வு நிலவி வருகிறது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் வேதனை தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரசால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நோய்க்கு எதிராக கோவாக்சின் போன்ற தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தடுப்பூசிகளை போடும் பணியில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் களமிறங்கியுள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், “உலகின் ஏழை நாடுகளில் உள்ள முதியவர்கள் மற்றும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டும்.
ஆனால் அத்தகையவர்களுக்கு செலுத்தப்பட வேண்டிய தடுப்பு மருந்துகளை சில பணக்கார நாடுகளில் நலமாக இருப்பவர்கள் செலுத்தி கொள்கின்றனர். இந்த செயல் உலக நாடுகளுக்கிடையே ஏற்ற தாழ்வை ஏற்படுத்தி வருகிறது. எனவே உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் கொரோனா நோய்க்கான தடுப்பு மருந்துகள் ஏற்றத்தாழ்வின்றி சம அளவில் விநியோகிக்கப்பட வேண்டுமென்று நோய் தடுப்பு மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்”.