Categories
விளையாட்டு

உலக தடகள சாம்பியன்ஷிப் : இந்திய வீராங்கனை ஷைலி சிங் ….வெள்ளி வென்று அசத்தல் ….!!!

நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஷைலி சிங்  2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார் .

20 வயதுக்கு உட்பட்டோருக்கான  உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கென்யா தலைநகர் நைரோபியில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீராங்கனையான ஷைலி சிங் (17) 6.59 மீட்டர் நீளம் தாண்டி 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார். இந்த ஆண்டின் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா பெறும்  3-வது பழக்கம் இதுவாகும்.

இந்தியாவை சேர்ந்த ஷைலி சிங்  0.01 மீட்டர் வித்தியாசத்தில் தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார். இதனால் 6.59  மீட்டர் நீளம் தாண்டி 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார் .இவரைவிட கூடுதலாக 6.60 மீட்டர் நீளம் தாண்டிய ஸ்வீடன் நாட்டை சேர்ந்த மஜா அஸ்காக் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார் . இதையடுத்து உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா ஹோரிலோவா வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

Categories

Tech |