மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற உலக தாய்ப்பால் வார விழாவில் மாவட்ட ஆட்சியர் லலிதா கலந்து கொண்டார் .
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமை தாங்கியுள்ளார். மேலும் விழாவில் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பினை ஆட்சியர் வழங்கினார். இதையடுத்து நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசும்போது, உலக தாய்ப்பால் வார நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பிறந்த குழந்தைக்கு தொடர்ந்து ஆறு மாதங்கள் தாய்ப்பால் வழங்குவதால் அந்த குழந்தைக்கும் தாய்க்கும் உடல் ஆரோக்கியமாக இருக்கும் .எனவே அந்த கால கட்டத்தில் தாய்மார்கள் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் இருப்பு வங்கி தொடங்கப்பட்டுள்ளது.
எனவே தாய்ப்பால் அதிகம் சுரக்கும் தாய்மார்கள் தாமாகவே முன்வந்து தாய்ப்பால் தானம் வழங்கலாம். இதன் மூலம் தாய்ப்பால் பற்றாக்குறை உள்ள தாய்மார்களின் குழந்தைகளுக்கும் இந்த தாய்ப்பால் வழங்கப்படும். இதற்கான அனைத்து வசதிகளும் மருத்துவமனையில் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றது”என்று அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜேந்திரன் மற்றும் மருத்துவர்கள் ,செவிலியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.