Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி அறிவிப்பு …!!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான நியூசிலாந்து அணி வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) தொடங்க உள்ளது. இந்த போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த இறுதிப்போட்டிக்கு முன்பாக நியூசிலாந்து அணி  இங்கிலாந்துக்கு எதிரான  2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1-0 என்ற கணக்கில்தொடரை கைப்பற்றியது.

தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான 15 பேர் கொண்ட நியூஸிலாந்து அணி வீரர்களின் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் காயம் காரணமாக இங்கிலாந்திற்கு எதிரான 2 வது  டெஸ்ட் போட்டியிலிருந்து விலகிய நியூஸிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் , விக்கெட் கீப்பர் வாட்லிங் ஆகிய இருவரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

நியூசிலாந்து அணி வீரர்கள்:

கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிவான் கான்வே, டாம் லாதம், ராஸ் டெய்லர், ஹென்றி நிகோல்ஸ், வில் யங், வாட்லிங், டாம் பிளன்டெல், டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, நீல் வாக்னெர், காலின் டி கிரான்ட்ஹோம், மேட் ஹென்றி, கைல் ஜாமிசன், அஜாஸ் பட்டேல்.

Categories

Tech |