Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : அணியில் கே.எல்.ராகுல்,ஷர்துல் தாகூர் இடம் பெறவில்லை…!!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால்,அக்‌ஷர் பட்டேல் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெறவில்லை

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நாளை மறுதினம் தொடங்குகிறது. இந்த போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடக்க உள்ளது . இந்த போட்டியில் இடம்பெற்றுள்ள  15 பேர் கொண்ட இந்திய அணி வீரர்களின் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது.

ஆனால்  சுழற்பந்து வீச்சாளர்களான அக்‌ஷர்  பட்டேல் ,வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை. அதேபோல் பேட்ஸ்மேன்கள் வரிசையில் கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை.

15 பேர் கொண்ட  இந்திய அணி : 
விராட் கோலி (கேப்டன்), ரகானே (துணைக் கேப்டன்),சுப்மான் கில், ரோகித் சர்மா, புஜாரா,ரிஷாப் பண்ட், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, பும்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது சிராஜ், விருத்திமான் சஹா, உமேஷ் யாதவ், ஹனுமா விஹாரி.

Categories

Tech |