உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிக் கொள்கின்றன.
இந்த போட்டி வருகிற ஜூன் மாதம் 18ஆம் தேதி ,இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் சூழல் ,நியூசிலாந்து அணிக்கு சாதகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது . அதேசமயம் இந்திய அணியும் , இதற்கு தகுந்தவாறு தயாராகும் என்பது சந்தேகமில்லை. குறிப்பாக நியூசிலாந்து அணியில் நீல் வாக்னர் , கைல் ஜேமிசன்,டிம் சவுத்தி மற்றும் டிரென்ட் போல்ட் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர் . இதுகுறித்து நியூசிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளரான நீல் வாக்னர் கூறும்போது, ” இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியானது ,உலகக் கோப்பை இறுதிப் போட்டியை போன்றது.
நியூசிலாந்து அணியில் ஒரு நாள் தொடர் அல்லது டி20 போட்டிகளில் , நான் விளையாட முடியாதது மிகப்பெரிய ஏமாற்றம் தான். இதன் பிறகு ஒயிட் பால் கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்குமா என்று நான் நினைக்கவில்லை. இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை உலக கோப்பை இறுதிப் போட்டியை ,முழு உற்சாகத்துடன் விளையாட வேண்டும் என்பதில்தான் என்னுடைய கவனம் இருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவது கடினமானது. உலகின் பல்வேறு பகுதிகளில் போட்டியை விளையாடுவது மிகவும் சவாலான ஒன்று “, என்று அவர் கூறினார்.