Categories
கிரிக்கெட் விளையாட்டு

“உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில”….”இந்த 3 பேரும் கலக்க போறாங்க” …! ‘மைக்கேல் வாகனின் கணிப்பு’ …!!!

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், 3 வீரர்களை குறிப்பிட்டு மைக்கேல் வாகன் கணித்து கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் வருகின்ற ஜூன் மாதம் 18 ஆம் தேதி இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு                  இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது.  இந்தப் போட்டிகள்  ரசிகர்களிடம்  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில்  இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன், இந்தப்போட்டியில் ஜொலிக்க போகும்  மூன்று வீரர்களை  குறித்து  கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ” நியூசிலாந்து அணியில் ஆல்ரவுண்டரான கைல் ஜேமிசன், இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.

 

இதற்கு முன் நடந்த டெஸ்ட் போட்டிகளிலும் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நிரூபித்துள்ளார். அடுத்ததாக இந்திய அணியில் ரிஷப் பண்ட் தற்போது நட்சத்திர வீரராக காணப்படுகிறார் . சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரிலும் அவர் அதிரடி ஆட்டத்தை காட்டினார். இதனால் இந்தத் தொடரிலும் அவர் சிறப்பாக விளையாடுவார். அதேபோல் நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேனான பிஜே வாட்லிங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது “,என்று அவர் கூறினார்.இந்த டெஸ்ட் தொடரில் இந்த 3 வீரர்களும் சிறப்பான பங்களிப்பை வழங்குவார்கள் ,என்று மைக்கேல் வாகன் கூறியுள்ளார் .

Categories

Tech |