Categories
உலக செய்திகள்

உலக தாதா தாவூத் இப்ராகிம்… பாகிஸ்தானால் வெளிவந்த பகிரவைக்கும் உண்மை…!!!

மும்பையைச் சார்ந்த நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் தன் மண்ணில் தங்கியிருப்பதாக பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது.

மும்பையைச் சார்ந்த நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம், கடந்த 1993 ஆம் ஆண்டு நாட்டையே அதிர வைக்கும் வகையில் நடந்த மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு மூலதனமாக செயல்பட்டுள்ளார். அதன் பின்னர் அவரை கண்டறிபவர்களுக்கு 25 மில்லியன் டாலர்கள் அமெரிக்கா நிர்ணயம் செய்திருந்தது. இதனைத்தொடர்ந்து தாவூத் இப்ராஹிம், அமெரிக்க மற்றும் இந்தியாவால் சர்வதேச பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் தலைமறைவாகி தனது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்.

ஆனால் பாகிஸ்தான், தாவூத் இப்ராகிம்க்கு தாங்கள் அடைக்கலம் தரவில்லை என்று தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வருகின்றது. இந்நிலையில், பாகிஸ்தானில் தாவூத் இப்ராகிம் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத குழுக்களைச் 88 தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் பாகிஸ்தான் தடை விதித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் மூலமாக தாவூத் இப்ராகிம் தங்கள் மண்ணில் இருப்பதை முதல் முறையாக பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது.

Categories

Tech |