Categories
விளையாட்டு

உலக துப்பாக்கி சுடுதல் போட்டி…இந்தியா மேலும் ஒரு பதக்கத்துடன் …28பதக்கங்களை கைப்பற்றியது …!!!

நடைபெற்ற  உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் ,இந்தியாவிற்கு 28 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

டெல்லியில் நடைபெற்று வரும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிக்காக 53 நாடுகளை சேர்ந்த 244 வீரர்-வீராங்கனைகள் பங்கு பெற்றுள்ளன. நேற்று வரை  நடைபெற்ற 9 வது நாள் போட்டி முடிவுகளில் இந்தியாவிற்கு 13 தங்கம் பதக்கங்கள், 8 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 6 வெண்கலப் பதக்கங்களை பெற்று மொத்த எண்ணிக்கையில் 27 பதக்கங்களுடன் முதலிடத்தில் இந்தியா உள்ளது.இந்நிலையில் 10 வது  நாளான இன்று, ஆண்களுக்காக துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது

25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் பிரிவுக்கான நடந்த  போட்டில்,  இந்தியாவை சேர்ந்த வீரர்களான விஜய் வீர் சித்து, குர்பிரீத்சிங் மற்றும் ஆதர்ஷ்சிங் கொண்டனர். அமெரிக்காவை சேர்ந்த கீத் சாண்டர்சன், ஷாக் ஹாப்சன் லெவரெட்,  மற்றும்  ஹென்றி டர்னர் ஆகியோர் கலந்து கொண்டனர். இரு அணிகளும் மோதிக்கொண்ட ,இப்போட்டியில் அமெரிக்கா 10-2 என்ற கணக்கில் தங்கப்பதக்கத்தை வென்றது. இதனால் இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. எனவே நடைபெற்ற போட்டிகளில் இந்தியா 28 பதக்கங்களை  பெற்றுள்ளது.

Categories

Tech |