உலக டூர் இறுதிச் சுற்று பேட்மிண்டன் போட்டியில் நடந்த லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்ற பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.
உலக டூர் இறுதிச் சுற்று பேட்மிட்டண் போட்டி இந்தோனேஷியாவில் பாலி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தனது முதல் லீக் ஆட்டத்தில் டென்மார்க் வீராங்கனை லின் கிறிஸ்டோபர்சென்னுடன் மோதினார் . இதில் 21-14, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இதையடுத்து நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் பிவி சிந்து ஜெர்மனியை சேர்ந்த யோனி லியை எதிர்த்து மோதினார். இதில் 21-10, 21-13 என்ற செட் கணக்கில் யோனி லியை வீழ்த்தி வெற்றி பெற்ற சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்