Categories
பேட்மிண்டன் விளையாட்டு

உலக டூர் பைனல் : கடைசி லீக் ஆட்டத்தில் …. பி.வி.சிந்து போராடி தோல்வி …..!!!

உலக டூர் பைனல் பேட்மிண்டன் போட்டியில் இன்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியடைந்தார்.

உலக டூர் பைனல் பேட்மிண்டன் போட்டி இந்தோனேசியாவில் உள்ள பாலி  நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இன்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் தாய்லாந்தை சேர்ந்த போன்பவி சோச்சுவாங்கை எதிர்த்து மோதினார். ஆனால் இன்று நடந்த போட்டியில் தாய்லாந்து வீராங்கனையின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் பி.வி.சிந்து திணறினார். இதனால் 12-21 21-19 14-21 என்ற நேர் செட் கணக்கில் பி.வி.சிந்து தோல்வியடைந்தார். இப்போட்டி சுமார் ஒரு மணிநேரம் 11 நிமிடங்கள் வரை நீடித்தது.

இதுவரை ஏழு முறை போன்பவி  சோச்சுவாங்குடன் விளையாடி உள்ள பி.வி.சிந்து 3 முறை  தோல்வியடைந்துள்ளார். இதன் மூலம் ‘குரூப்-ஏ’ பிரிவில் பி.வி.சிந்து 2-வது இடத்தில் உள்ளார். சோச்சுவாங் முதல் இடத்தை பிடித்துள்ளார் .அதேபோல் ‘குரூப்-பி’ பிரிவில் ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சி, கொரிய வீராங்கனை ஆன் சே யங்  ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.

Categories

Tech |