Categories
பேட்மிண்டன் விளையாட்டு

உலக டூர் இறுதி சுற்று : இந்தியாவின் பி.வி.சிந்து …. வெள்ளி வென்று அசத்தல் ….!!!

உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டியில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டி இந்தோனேசியாவில் உள்ள பாலி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ‘குரூப் ஏ’ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அடுத்தடுத்து 2 போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி இருந்தார். இதையடுத்து நடந்த அரையிறுதி போட்டியில் ஜப்பானை சேர்ந்த அகானே யமகுச்சியை வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறினார் .இந்நிலையில் இன்று நடந்த தங்கப் பதக்கத்துக்கான இறுதிச்சுற்றில் பி.வி.சிந்து தென்கொரியாவை சேர்ந்த ஆன் சியோங் மோதினர் .

ஆனால் தென்கொரிய வீராங்கனையின்  வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் பி.வி.சிந்து திணறினார் .இறுதியாக 16-21, 12-21 என்ற நேர் செட் கணக்கில் பி.வி.சிந்து தோல்வியடைந்ததால் அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது .இதனிடையே உலக டூர் இறுதி சுற்று தொடரில் 3-வது முறையாக இறுதிப் போட்டி வரை முன்னேறிய பி.வி.சிந்து கடந்த 2018-ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றார் என்று குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |