ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ,தற்போது கார்பெண்டராக வேலை பார்த்து வரும் வீடியோ வெளியாகியுள்ளது.
கடந்த 2010 ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில்,ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளராக சேவியர் டொஹார்ட்டி அறிமுகமானார். அதே ஆண்டு நடந்த ஆஷஸ் தொடரிலும் இடம்பெற்று ,டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். கடந்த 2015 ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை வென்ற போது ,அணியில் இவர் இடம் பிடித்திருந்தார். அதன் பிறகு 2016- 17 சீசனுக்கு பின் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெற்றார்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ,அவர் தற்போது கார்பெண்டராக வேலை செய்து வருகிறார். அவர் வேலை செய்யும் வீடியோ ஒன்றை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் சங்கம், ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இதுகுறித்து பேசிய அவர், ” கார்பெண்டராக வேலை செய்யும், நான் கட்டிடம் கட்டுமான பகுதிகளில் மகிழ்ச்சியுடன் வேலை பார்த்து வருகிறேன். வெளியிடத்தில் நான் வேலை செய்யும் போது புதிய விஷயங்களை கற்றுக் வருகிறேன். இது கிரிக்கெட்டை விட முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது “,என்று அவர் கூறினார்.
https://twitter.com/ACA_Players/status/1394558783892844549