உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 கோடியை கடந்துள்ளது.
சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அதிவேகமாக பரவி பெரும்பாதிப்புக்கு உள்ளாகியது. மேலும் இந்த கொரோனா தொற்று பரவ தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இருப்பினும் கொரோனா தொற்றின் பாதிப்பானது இதுவரை முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. மேலும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் முதல் 5 இடங்களில் உள்ளன.
இதனால் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசிகள் போடும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனா வைரஸின் பரவல் முழுமையாக கட்டுக்குள் வந்தபாடில்லை. தற்போது உலகம் முழுவதும் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது 24 கோடியை கடந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இருந்து 21.76 கோடிக்கும் மேலானோர் இதுவரை குணமடைந்துள்ளனர்.
இந்த கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிந்தவர்களின் எண்ணிக்கையானது 48.96 லட்சம் பேர் ஆகும். இந்த நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் 1.77 கோடிக்கும் அதிகமானோர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக சிகிச்சை பெற்று வரும் 81,000 க்கும் மேற்பட்டோரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.