இந்திய ராணுவம் ஒரு பார்வை…..
கரடு முரடான மலை சிகரங்கள், கடும் குளிர் மற்றும் பனி மலைகள், சுட்டெரிக்கும் பாலைவன வெயில், மழை, வெள்ளம், புயல், விஷக்கிருமிகள், மிகக் கொடிய வனவிலங்குகள், விஷப்பாம்புகள் என இயற்கை சீற்றங்கள் எல்லாம் தாண்டி மனம் தளராமல் நாட்டைக் காக்க உறுதியோடு போராட தன் வீடு சுகம் துக்கம் சோகம் என அனைத்தையும் மறந்து போராட்டமே பொழுதுபோக்காக கொண்டவர்கள்தான் ராணுவ வீரர்கள். வீரம் என்ற வார்த்தைக்கான இலக்கணம் இவர்கள் தான். தேசத்தை கட்டிக் காக்கும் அரண் ராணுவ வீரர்கள்.
ராணுவ உருவான ஆரம்ப கால வரலாறு ஒரு பார்வை….
பிரிட்டிஷாரின் கிழக்கிந்திய கம்பெனியின் 1776 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் ராணுவப்படை தொடங்கப்பட்டது இதுதான் தற்போதைய இந்திய ராணுவத்தின் தொடக்கப்புள்ளி இதனைத் தொடர்ந்து 1833ஆம் ஆண்டு வங்காளம் மும்பை சென்னை உள்ளிட்ட இடங்களில் ராணுவப்படை விரிவுபடுத்தப்பட்டது இவை அனைத்தும் 1895 ஆம் ஆண்டு ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்பட்டு பிரிட்டிஷ்-இந்திய ராணுவ உதயமானது. இதன் மேல் மட்டத்தில் ஆங்கிலேயர்கள் இருந்தாலும் அடுத்தடுத்த இடங்களில் இந்தியர்களை பொறுப்பில் இருந்தார்கள்.
அப்போது பிரிட்டிஷ்காரர்களுகாக உள்நாட்டு பாதுகாப்பு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இந்திய ராணுவ படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். உலகப்போர் காலத்தில் பிரிட்டிஷ்-இந்திய ராணுவத்தின் பங்கு முக்கியமானது. ஜப்பான் ஐரோப்பா நாடுகள் என பல்வேறு நாடுகளும் இந்திய ராணுவ படையினர் அழைத்துச் செல்லப்பட்டனர். முதலாம் உலகப்போரில் சுமார் 13 லட்சம் இந்தியப் படையினர் பங்கேற்றனர். அதில் 74187 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இரண்டாம் உலகப்போரின் இந்தியப் படையினர் 87 ஆயிரம் பேர் தமது இன்னுயிரை ஈந்தனர். உலகப் போரில் வெற்றிபெற்றால் இந்தியாவுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்குவதாக கூறி பிரிட்டிஷார் இந்த போரில் இந்தியர்களை ஈடுபடுத்தினார்கள். இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டிஷாரிடம் இருந்து சிங்கப்பூரைக் கைப்பற்றியது ஜப்பான் ராணுவம். அப்போது சிறைபிடிக்கப்பட்ட பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தினர் 40 ஆயிரம் பேர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்தனர் . இந்திய சுதந்திரப் போரில் இது மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது.
1947ம் ஆண்டு இந்திய சுதந்திரம் பெற்ற பின்னர் 10 கூர்க்கா ரெஜிமண்டகளில் 4 ரெஜிமண்டிகள் பிரிட்டிஷ் இராணுவத்தில் இணைக்கப்பட்டது. இந்த பிரிவு இன்றும் பிரிட்டிஷ் ராணுவத்தில் இயங்கி கொண்டிருக்கிறது. ஏராளமான கூர்க்காக்கள் அந்த ராணுவத்தில் இருக்கிறார்கள்.
பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் மற்ற பிரிவுகளில் இந்திய ராணுவம் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் என இரண்டாக பிரிக்கப்பட்டது. இன்று ஐநா அமைதிப்படையின் குழுவில் இந்தியப் படையினரின் பங்கு இன்றியமையாததாக இருக்கிறது. மொத்த உறுப்பினர்களின் இந்திய ராணுவத்தினரின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது.
உலகின் மூன்றாவது பெரிய ராணுவ சக்தியாக இந்தியா மாறி உள்ளது. இங்கிலாந்து பிரான்சுக்கும் மேலாக இந்தியா உள்ளது அமெரிக்க மற்றும் சீனா ஆகிய நாடுகள் இந்தியாவிற்கு மேலே உள்ளது. 2017 ஆம் ஆண்டுக்கான 133 நாடுகளில் ராணுவ நிலைகளை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.