உலகம் முழுவதும் இதுவரை 708 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.
உலகளவில் பெரும் பாதிப்பை உண்டாக்கிய கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. அதுமட்டுமின்றி, கொரோனா வைரஸால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே, உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும், கொரோனா பரவலின் தாக்கம் கட்டுக்குள் வந்தபாடில்லை.
தற்போது, உலகம் முழுதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது 24.78 கோடியாக உள்ளது. மேலும், உலகளவில் கொரோனா பாதிப்பில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் அமெரிக்காவில் 4.6 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 7.46 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து 2 ஆவது இடம் வகிக்கும் இந்தியாவில் 3.42 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 4.58 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், நேற்றைய நிலவரப்படி உலகம் முழுவதும் 708 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதிலும், 302 கோடி பேருக்கு 2 ஆவது டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். மேலும், இந்தியாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 52.02 லட்சம் பேருக்கு சுகாதாரத்துறை பணியாளர்களால் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், சீனாவில் தான் அதிகமாக 224.9 கோடி பேருக்கும், அதற்கு அடுத்ததாக இந்தியாவில் 107.19 கோடி பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.