Categories
உலக செய்திகள்

‘150 கோடி தடுப்பூசிகள் உற்பத்தி’…. உலகளவில் செயல்படுத்தப்படும் திட்டம்…. டெட்ராஸ் அதானம் தகவல்….!!

உலகம் முழுவதிலும் உள்ள மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான திட்டத்தை செயல்படுத்தப்போவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் இயக்குனரான டெட்ராஸ் அதானம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “இந்த நடப்பு ஆண்டின் இறுதிக்குள் உலக நாடுகள் அனைத்திலும் 40% மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும். இதே போன்று வருகிற 2022ஆம் ஆண்டும் 70% மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

உலகம் மிகவும் ஆபத்தான காலகட்டத்தில் உள்ளது – உலக சுகாதார அமைப்பு தலைவர் –  Miraclewoods

இந்த இலக்கை அடைவதற்கு 1500 கோடி தடுப்பூசிகள் தேவைப்படும். மேலும் உலகம் முழுவதும் மாதம் ஒன்றிற்கு 150 கோடி தடுப்பூசிகள் தற்போது உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நமது இலக்கை அடைவதற்கான வழிகிடைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |